
தமிழில் வெளியான 'மாயாண்டி குடும்பத்தார்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.கே. செல்வகுமார் மற்றும் அவரது மனைவி பிந்து செல்வகுமார் உட்பட 5 பேர் மீது மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த யுனிக் செயின்ஸ் அண்ட் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய தங்கத்திற்கான நிலுவைத் தொகைக்காக வழங்கிய ரூ.15.34 கோடி மதிப்பிலான காசோலைகள் திரும்பப் பெறப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தயாரிப்பாளரின் மனைவி பிந்து செல்வகுமார் (45) மற்றும் ஆனந்தமூர்த்தி நடராஜன் (40) ஆகிய இருவரை பெங்களூருவில் போலீசார் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள தயாரிப்பாளர் செல்வகுமாரை தேடி வருகின்றனர்.