
செம்மஞ்சேரியில் 128 ஏக்கரில் ரூ.261 கோடியில் அமைக்கப்படவிருந்த சர்வதேச விளையாட்டு நகரம் ரத்து செய்யப்படவில்லை என்றும், அது மறுகட்டமைப்பு செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
ஒலிம்பிக் தரத்தில் 46 விளையாட்டு வசதிகளுடன் இந்த நகரத்தை உருவாக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், முதல்வர் அனுமதி அளித்ததும் 6 மாதங்களில் பணிகள் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் பிஎம்எக்ஸ் சைக்கிள் தளம் மற்றும் நீர் விளையாட்டு வசதிகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கட்டமைப்புகள் இடம்பெறவிருந்தன.