/nakkheeran/media/media_files/2026/09/20/denguedoctor-2026-09-20-12-14-56.jpg)
தமிழ்நாட்டில் பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது; மாநிலத்தில் 1500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 250-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை இல்லாத காலங்களிலும் வீடுகளில் சேமித்து வைக்கும் தண்ணீரில் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிடுவதால் டெங்கு பரவலாம் என சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.