
நஹால் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'ஐ ஆம் கேம்' திரைப்படம், கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் உலகம் முழுவதும் 3 நாட்களில் ரூ. 25 கோடியை வசூலித்துள்ளது.
மலையாளம் தவிர பிற மொழிகளில் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால், இப்படம் தமிழில் வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது.
துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய செலவில் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.