
ராமாயணம் திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க தான் மறுத்ததால் சாய் பல்லவிக்கு வாய்ப்பு சென்றதாகப் பரவிய வதந்திகளை நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி மறுத்துள்ளார்.
தான் அந்த கதாபாத்திரத்திற்காக ஆடிஷனில் பங்கேற்றதாகவும், ஆனால் தேர்வாகவில்லை என்றும் ஸ்ரீநிதி ஷெட்டி சமீபத்திய பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார்.
கேஜிஎப் திரைப்படங்கள் மூலம் பிரபலமான ஸ்ரீநிதி ஷெட்டி, தற்போது தெலுங்கில் 'ஆதர்ஷ குடும்ப ஹவுஸ்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.