
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரான மோசின் நக்வி இந்திய அணிக்கு பதக்கம் வழங்கினால் என்ன நடக்கும் என்ற விவாதம் எழுந்துள்ளது.
இது ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலால் நடத்தப்படும் தொடர் என்பதால், பதக்கம் வழங்குபவர்கள் பட்டியலில் இருந்து குறிப்பிட்ட ஒரு நபரை நீக்க வேண்டும் என இந்தியா முன்கூட்டியே நிபந்தனை விதிக்க முடியாது என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
எனினும், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் விதி எண் 66-ன் படி தலைவர் அல்லது அவரது பிரதிநிதிகளே பதக்கம் வழங்குவார்கள் என்பதால் நக்வி பதக்கம் வழங்குவது தவிர்க்கப்படவும் வாய்ப்புள்ளது.