
‘என் இனிய பொன் நிலவே’ பாடல் காப்புரிமை விவகாரத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் தலையிட முடியாது என நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.
பாடலின் இசைக்கான உரிமை இளையராஜாவுக்கு இருந்தாலும், வரிகள் மற்றும் ஒலிப்பதிவு மீதான முழுமையான உரிமையை கோர முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.