2026 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் கூட்டு வில்வித்தையில் இந்திய அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா தனது 10-வது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளதுடன், பதக்கப் பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மேலும் வில்வித்தை கலப்பு இரட்டையரிலும் இந்தியா தங்கம் வென்றதுடன், கபடியில் 4-வது வெற்றியைப் பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.