
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகில் கரும்புகையுடன் தீப்பிழம்புகள் எழுந்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
இது ஹவுதி கிளர்ச்சிப் படையின் தாக்குதலாக இருக்கலாம் என்று நேரில் கண்டவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் காரணமாக வான்வழிப் பாதையில் விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடில் தாமதம் ஏற்பட்டுள்ளது.