
தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
எந்தச் சூழலிலும் தவெக அமைச்சரவையில் சேர மாட்டோம் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், இடதுசாரிக் கட்சிகள் இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து கட்சிக்குள் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றும், அடுத்த மாதம் பெரிய பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.