
சிரியாவில் தொடர் மழையால் டெயிர் அல்-ஜார் பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 5 குழந்தைகள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி மேலும் 7 பேர் காயமடைந்த நிலையில், 4 பேரைக் காணவில்லை என்பதால் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் 5 குழந்தைகள் வெள்ள நீரில் மூழ்கியும், ஒருவர் சாலை விபத்திலும் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.