
ஈரானின் மஷாத் நகரில் இருந்து கெர்மன்ஷா நகருக்குச் சென்ற செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் போயிங் 737 விமானம் நடுவானில் என்ஜின் கோளாறால் கடுமையாகக் குலுங்கியது.
விமானத்தின் டயர்களில் ஒன்றின் வெளிப்புற பகுதி பிரிந்து வந்ததால் என்ஜினில் தொழில்நுட்பப் பிரச்சினை ஏற்பட்டு பயணிகள் அமர்ந்திருந்த கேபின் உட்புற மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தன.
உடனடியாக விமானி கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு மஷாத் விமான நிலையத்திற்கே விமானத்தைப் பத்திரமாக அவசரத் தரையிறக்கம் செய்தார்.