
அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்பதில்லை என்றும், நல்லது செய்ய விரும்புபவர்கள் எங்கிருந்தும் அதைச் செய்யலாம் என்றும் நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் ரசிகர் மன்ற நிர்வாகியின் திருமண விழாவில் பங்கேற்ற அவர், தனது பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதி ரசிகர்கள் குடும்பத்துடன் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.
வெற்றிப்படமான 'தனி ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதைப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் அவர் கூறினார்.