
‘டிராகன்’ திரைப்பட படப்பிடிப்பின் போது தோள்பட்டையில் காயமடைந்த நடிகர் ஜூனியர் என்டிஆர், செகந்திராபாத் கிம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அவர் முழுமையாக குணமடைய 2 முதல் 3 மாதங்கள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தனது உடல்நிலை குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஜூனியர் என்டிஆர், தனக்காகப் பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.