
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஜோதி யர்ராஜி, 2025-ல் ஏற்பட்ட முழங்கால் தசை நார் காயத்தில் இருந்து மீண்டு, 2026 ஜூனில் புவனேஸ்வரின் கலிங்கா மைதானத்தில் நடந்த தேசிய சீனியர் தடகளத்தில் தங்கம் வென்றார்.
100 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் 12.99 வினாடிகளில் இலக்கை எட்டிய ஜோதி, இந்த ஆண்டு ஜப்பானின் நகோயாவில் செப். 19 முதல் அக். 4 வரை நடக்க உள்ள ஆசிய விளையாட்டுக்கு தகுதி பெற்றார்.
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் 100 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்ற ஜோதி, 2023-ல் 12.78 வினாடிகளில் தேசிய சாதனை படைத்துள்ளார்.