
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 14-ம் தேதி வெளியான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் உலகளவில் 240 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது.
மமிதா பைஜூ, ராதிகா உள்ளிட்டோர் நடித்த இப்படம், வாடகைத் தாய் மற்றும் திருமண உறவை மையமாகக் கொண்ட கதையம்சம் கொண்டதாகும்.
இந்த ஆண்டில் சூர்யா நடித்த இரண்டு படங்களும் 200 கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.