
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று இயற்கை வளங்கள், தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
ஹீமோபிலியா நோயாளிகளுக்கு எமிசிஜுமாப் மருந்து வழங்கக் கோரி டாக்டர் எம்.எஸ். ரவியும், மாணவியர் விடுதி கட்டடம் குறித்து கு. ரவி மனோகரனும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளனர்.
விவாதங்களுக்குப் பிறகு அமைச்சர்கள் டி.கே. பிரபு, கீர்த்தனா மற்றும் குமார் ஆகியோர் தங்கள் துறைகள் சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.