
நடிகை கயாடு லோஹர் விமானப் பயணத்தின்போது தற்செயலாக நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ரஜினிகாந்தை அருகில் பார்த்த தருணத்தில், தனது மனதில் 'சுந்தரி' பாடல் ஒலித்ததாகக் குறிப்பிட்டு அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழில் 'டிராகன்' படம் மூலம் அறிமுகமான கயாடு லோஹர், தற்போது ஜி.வி. பிரகாஷுடன் 'இம்மார்டல்' மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.