
டென்மார்க்கில் நடந்த சூப்பர் 750 அந்தஸ்து பெற்ற சர்வதேச பாட்மின்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் கொரிய வீராங்கனை ஆன் சே-யங் சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிப் போட்டியில் ஜப்பானின் அகானே யமாகுச்சியை ஆன் சே-யங் 21-23, 21-14, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
ஒரு மணி நேரம் 19 நிமிடம் நீடித்த இப்போட்டியில் வென்றதன் மூலம் ஆன் சே-யங் தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.