
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே குட்டிமாரி என்ற பெண்ணை அடித்துக் கொலை செய்து, உடலை சாக்கு மூட்டையில் கட்டி வாழைத்தோட்டத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் அவரது கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குட்டிமாரி வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி அவரது கணவர் முருகன், தம்பி ரவி மற்றும் தாயார் சிவகாமி ஆகியோர் சேர்ந்து இக்கொலையைச் செய்துள்ளனர்.
மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட 3 தனிப்படைகள், தடயங்கள் மற்றும் கேமரா பதிவுகள் அடிப்படையில் விசாரணை நடத்தி 12 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளைக் கைது செய்தனர்.