
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் வலுவான லாபம் காரணமாக, ஓஎன்ஜிசி நிறுவன பங்குகள் அடுத்த 12 மாதங்களில் 21 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் கணித்துள்ளது.
நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்குப் பரிந்துரைத்துள்ள தரகு நிறுவனம், அதன் இலக்கு விலையை ரூ.290 ஆக நிர்ணயித்துள்ளது.
முதல் காலாண்டில் எரிவாயு வருவாயில் புதிய கிணறுகளின் பங்களிப்பு 38 சதவீதமாக உயர்ந்துள்ளதும், வெளிநாட்டு திட்டங்களின் லாபம் அதிகரித்திருப்பதும் நிறுவனத்திற்குச் சாதகமான அம்சங்களாகும்.