
இஸ்ரோ நிறுவனத்தின் செயல்பாடுகளைத் தனியார் வசம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாகப் பரவிய செய்திகளை இஸ்ரோ நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
செப்டம்பர் 4-ஆம் தேதி ஊழியர் அமைப்புகள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த இஸ்ரோ, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மூலோபாயத் திட்டங்களில் இந்தியா தொடர்ந்து முதன்மை நிறுவனமாகச் செயல்படும் எனத் தெரிவித்துள்ளது.
தனியார் பங்களிப்பு என்பது விண்வெளித் துறையின் விரிவாக்கமே தவிர தனியார்மயமாக்கல் அல்ல என்றும், தொழில்நுட்பச் சந்தைப்படுத்துதலில் மட்டுமே தனியார் துறை ஈடுபடும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.