
இந்தியா - ஜிம்பாப்வே மகளிர் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 121 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
இப்போட்டியில் 126 ரன்கள் குவித்த ஹர்மன்பிரீத் கவுர், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 8-வது சதத்தை அடித்து மிதாலி ராஜின் சாதனையை முறியடித்தார்.
ஹர்மன்பிரீத் கவுருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீப்தி சர்மா 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.