
செகந்தராபாத்தில் நடைபெற்ற ரஞ்சி டிராபி போட்டியில் சத்தீஸ்கர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்சில் சத்தீஸ்கர் 284 ரன்களும், ஐதராபாத் 280 ரன்களும் எடுத்த நிலையில், இரண்டாவது இன்னிங்சில் சத்தீஸ்கர் 254 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
259 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து திணறிய நிலையில், கடைசி விக்கெட்டுக்குப் போராடிய அனிகேத் ரெட்டி - ரக்ஷன் ரெட்டி ஜோடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.