
2027-ம் ஆண்டு அக்டோபர் 4 முதல் நவம்பர் 21 வரை நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குத் தயாராகும் வகையில், தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் தொடரில் விளையாட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இந்தத் தொடரில் 4 முதல் 6 ஒருநாள் போட்டிகளை நடத்த இந்திய அணி நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துடன் இது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், வீரர்களின் உடற்தகுதிக்கு பிசிசிஐ முக்கியத்துவம் அளித்து வருகிறது.