
செய்யறிவு துறையின் வளர்ச்சியை மட்டுப்படுத்த வேண்டும் என்று ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி தெரிவித்த கருத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார்.
செய்யறிவானது தீமையை விட அதிக நன்மைகளையே தரும் என்றும், சீனாவைவிட செய்யறிவு துறையில் அமெரிக்காவே முன்னிலையில் இருப்பதாகவும் அவர் அயர்லாந்து பயணத்தின் போது குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாத இறுதியில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.