
பள்ளிக் குழந்தைகளில் 25 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையான 'Prediabetes' இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உடற்பயிற்சியின்மை, அதிக திரை நேரம் மற்றும் சர்க்கரை நிறைந்த பானங்களை உட்கொள்வது இந்த பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணங்களாக உள்ளன.
இந்த நிலையில் உள்ள குழந்தைகள் வாழ்க்கை முறையை மாற்றாவிட்டால், அடுத்த சில ஆண்டுகளில் 90 சதவீதம் பேருக்கு முழுமையான நீரிழிவு நோய் வர வாய்ப்புள்ளது.