
பொதுமக்களிடம் எந்தவொரு யுபிஐ பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படாது என்று மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.
வரும் அக்டோபர் 15 முதல் வணிக யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் வரை கட்டணம் அமலுக்கு வரவுள்ள நிலையில், இதை பொதுமக்கள் மீது சுமத்துவதைத் தடுக்க புதிய கண்காணிப்பு நடைமுறை அமல்படுத்தப்படவுள்ளது.
தனிநபர்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகள் 86 சதவீதம் உள்ளதால் புதிய கட்டண நடைமுறையால் எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.