
ஆந்திர மாநிலம் காக்கினாடாவில் தனது 111-வது திரைப்பட படப்பிடிப்பின் போது, சண்டைக் காட்சியில் நடித்த நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா கால் நழுவி விழுந்ததில் இடது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தசைக் கிழிவு காரணமாக 3 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ள பாலகிருஷ்ணாவை, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து நலம் விசாரித்த நிலையில், அவர் குணமடைந்த பின் படப்பிடிப்பில் மீண்டும் பங்கேற்பார் என படக்குழு தெரிவித்துள்ளது.