
இந்தியாவில் இஸ்லாமியர்கள் இருக்கக்கூடாது என நினைப்பவர்கள் உண்மையான இந்துக்கள் அல்ல என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
அனைவரையும் சமமாக நடத்துவதே இந்துத்துவத்தின் அடிப்படை கொள்கை என்று வலியுறுத்திய அவர், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் அந்த நாட்டுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்தியாவின் பாரம்பரிய விழுமியங்களையும் பண்பாட்டு மதிப்புகளையும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.