
மராத்வாடா முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் நாளை (செப்.18) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், பல மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் துறையூர், விழுப்புரம் மாவட்டம் மயிலம், திண்டிவனம் ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.