நீலகிரி மாவட்ட விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று 'வி தி லீடர்ஸ்' அமைப்பு மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக உரம், விதை மற்றும் வாகன வாடகை பல மடங்கு அதிகரித்துள்ளதால், மலை காய்கறிகள் மற்றும் தேயிலை விவசாயம் செய்யும் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
விளைவிக்கப்படும் காய்கறிகளை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல கூடுதல் செலவாவதால், விவசாயிகளை காக்க கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என அமைப்பின் சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார்.