
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்திற்கு 'இஞ்சி வெல்லம்' எனத் தலைப்பிடப்பட்டு, அதன் வீடியோ போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் இந்தியா டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், லைகா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை வழங்குகிறது.
கொல்கத்தாவில் பெரும்பாலான படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இப்படம், 2027-ம் ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.