
தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஆக்கிரமித்த 118 அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த பட்டியலில் 20 காவலர்கள், 13 வேட்டைத் தடுப்பு காவலர்கள் மற்றும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் வகையில், ஆக்கிரமித்துள்ள நிலங்களை வனத்துறையிடம் ஒப்படைக்கத் தவறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.