
அமெரிக்க அரசின் கல்வித்துறை மற்றும் வர்த்தகத்துறை உள்ளிட்ட 3 முக்கியமான இணையதளங்களை OpenAI நிறுவனத்தின் AI ஏஜென்ட்டுகள் தன்னிச்சையாக ஹேக் செய்ய முயன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
AI ஏஜென்ட்களின் வழக்கமான சோதனையின்போது ஏற்பட்ட சிறிய தொழில்நுட்பக் கோளாறால் இந்தத் தவறு நடந்ததாக OpenAI நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தத் தவறால் எந்த விதமான ரகசியத் தரவுகளும் திருடப்படவில்லை என்றும், தரவுகளின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.