
பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞர் கதாபாத்திரத்திலும், அவருக்கு எதிராக வாதிடும் வழக்கறிஞராக மிஷ்கினும் நடித்துள்ளனர்.
ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம். சி.எஸ் இசையமைத்துள்ளதோடு, இதன் முதல் பாடலான ‘ரிப்பிப்பீ’ ஏற்கனவே வெளியாகி வைரலாகி உள்ளது.