
ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிக ரீதியான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் என்பிசிஐ தரப்பு நான்கு வாரங்களில் இது குறித்து விளக்கம் தருமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் அக்.15 முதல் ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிக ரீதியான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் அறிவிப்பை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.