
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள அக்கரப்பாக்கம் மற்றும் மேட்டு காலனி பகுதிகளில் தொடர் மின்தடை ஏற்பட்டதைக் கண்டித்து, கிராம மக்கள் நள்ளிரவில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்வாரிய அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாத ஆத்திரத்தில், 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கன்னிகைப்பேர் ஏரிக்கரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.