
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்ற இளைஞர் மற்றும் பெண்கள் ஹாக்கி பென்டாத்லான் 2026 போட்டியில், இந்திய ஆண்கள் அணி இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.
இந்த வெற்றி விழாவில் இந்திய தூதர் பிரசாந்த் பிசே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு, வீரர்களின் ஒற்றுமை மற்றும் விடாமுயற்சியை பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இந்த ஹாக்கி அணியின் திறமையை தூதர் பிரசாந்த் பிசே வெகுவாகப் பாராட்டி, எதிர்காலத்திலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்தினார்.