
தமிழகத்தில் மது பாட்டில் ஒன்றுக்கு சுற்றுச்சூழல் மற்றும் சமூக தீர்வை வரியாக 20 ரூபாய் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக மதிப்புக்கூட்டு வரி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வரி மூலம் கிடைக்கும் வருவாய் மது மறுவாழ்வு திட்டங்கள், விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.