
வளைகுடா கடற்பகுதியில் ஈரானை முற்றுகையிட்டுள்ள அமெரிக்காவின் 'யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன்' போர்க்கப்பலில் உள்ள மாலுமிகள், சொந்த நாட்டிற்கு செல்ல முடியாமல் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்று வருகின்றனர்.
கடந்த நவம்பர் 21-ல் சான் டியாகோவிலிருந்து புறப்பட்ட இக்கப்பலில் உள்ள 5,000-க்கும் மேற்பட்ட மாலுமிகள், கடந்த 250 நாட்களில் குவாம் மற்றும் ஓமானில் தலா ஒரு முறை என இரண்டு நாட்கள் மட்டுமே தரையிறங்கியுள்ளனர்.
உடைந்த கழிப்பறைகள் மற்றும் உணவு பற்றாக்குறையால் வீரர்கள் தவிப்பதாக ஜனநாயகக் கட்சி எம்பி மைக் லெவின் குற்றம் சாட்டியுள்ள நிலையில், சான் டியாகோவில் 200 குடும்பத்தினர் கடற்படை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.