Economy
தமிழகத்தில் ரூ.11,000 கோடி முதலீடு: லண்டனில் ஒப்பந்தம்

தமிழகத்தில் ரூ.11,000 கோடி முதலீடு: லண்டனில் ஒப்பந்தம்

vikatan1h
THE BRIEF
1

முதல்வர் விஜய் தனது முதல் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றுள்ள நிலையில், தமிழகத்தில் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் ரூ. 11,000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

2

மின்சாதன உற்பத்தித் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்து 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ‘வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

3

இந்த நிகழ்வில் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனப் பிரதிநிதிகள், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப் மற்றும் இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.