
தைவானின் வடக்கு பகுதியை இந்த வார இறுதியில் தாக்கவுள்ள 'சவுடெல்' புயல் காரணமாக, நாட்டின் தெற்கு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கவ்ஷியுங் மற்றும் தைனான் உள்ளிட்ட நகரங்களில் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதோடு, முக்கிய விரைவு ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கவ்ஷியுங் நகரில் மட்டும் சுமார் 1.3 மீட்டர் (4.3 அடி) வரை மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.