
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் டிஜேவாகப் பணியாற்றும் சுதன் குமார், ரம்யா என்பவரை ஆகஸ்ட் 28-ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.
அரசுப் பள்ளியில் படித்த சுதன், தமிழக அரசு வழங்கிய இலவச லேப்டாப் மூலம் டிஜே கலையைக் கற்றுக்கொண்டு, தனது கடின உழைப்பால் இந்த நிலையை அடைந்துள்ளார்.
திருமண புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சுதனுக்கு, விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.