தங்களின் கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால் ஹார்முஸ் ஜலசந்தியை இரண்டு நாட்களில் திறக்க தயார் என ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசியாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவது, வெளிநாடுகளில் முடக்கப்பட்ட ஈரானின் சொத்துகளை விடுவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை கடந்த செப்டம்பர் மாதம் ஈரான் முன்மொழிந்தது.
அமெரிக்க நாடாளுமன்றத்துக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீது தாக்குதல் நடத்தும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.