தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா, வலது தொடை தசை காயத்தால் செப்டம்பர் 24 முதல் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் மறுவாழ்வு பயிற்சிகளை மேற்கொண்டு வரும் ரபாடா, முழு உடற்தகுதியை அடைய குறைந்தது நான்கு வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரபாடா பங்கேற்பது, அவரது உடற்தகுதியைப் பொறுத்தே அமையும் எனத் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.