
தூத்துக்குடி மாநகரில் கொசு உற்பத்தி செய்யும் வகையில் தண்ணீர் தேக்கி வைத்திருந்த இரண்டு கடைகளுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மாநகராட்சி ஊழியர்கள் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டபோது இந்த கடைகள் கண்டறியப்பட்டன.
பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் கடைகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.