
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் மேட்ச் பிக்சிங் புகாரில் ஈடுபட்ட செர்பிய டென்னிஸ் வீரர் ஸ்டீபன் மிலிசெவிச்சுக்கு சர்வதேச டென்னிஸ் நேர்மை முகமை (ITIA) 24 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
29 வயதான மிலிசெவிச், 2022 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தான் பங்கேற்ற போட்டிகள் உட்பட பல போட்டிகளின் முடிவுகளை மாற்றியமைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இதன் விளைவாக அவர் 2050-ஆம் ஆண்டு வரை டென்னிஸ் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு 70,000 அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.