
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி நாளை காலை 10 மணிக்கு கொழும்பில் தொடங்குகிறது.
கடந்த 15-ம் தேதி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 165 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்தியாவும், தொடரை சமன் செய்ய இலங்கையும் தீவிரமாகப் போராடும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.