
ஆப்பிரிக்க நாடான கானாவில் மின் தட்டுப்பாட்டைப் போக்கவும் தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்தவும் 2 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட அணுமின் நிலையம் அமைக்க ரஷியா ஒப்புக்கொண்டுள்ளது.
கானா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி சாமுவேல் ஒகுட்ஸெட்டோ அப்லக்வா இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையே புதிய பாதுகாப்புப் படை ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதோடு, ரஷியா கானா ராணுவத்துக்கு அதிநவீன ஆயுதங்களை வழங்கவுள்ளது.